வெளிநாட்டவருக்கான 'ஒர்க் பெர்மிட்' விதிகளை இறுக்கியது சிங்கப்பூர்- இந்தியர்களுக்கு சிக்கல்!

சிங்கப்பூரில் ஏராளமான வெளிநாட்டவர்கள், குறிப்பாக இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்கு வெளிநாடடவர்கள் தங்கிப் பணி புரிவதற்கான வேலை பெர்மிட்டைப் பெற குறைந்தது மாதம் 2800 சிங்கப்பூர் டாலர் சம்பளம் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட சில விதிமுறைகள் உள்ளன. தற்போது இந்த விதிமுறையை இறுக்கி விட்டது சிங்கப்பூர் அரசு.
அதன்படி வேலை பெர்மிட் பெற விரும்பும் வெளிநாட்டவர்கள், மாதம் 3000 சிங்கப்பூர் டாலர் சம்பளமாக பெற வேண்டும். அதற்குக் குறைவாக சம்பளம் பெற்றால் வேலை பெர்மிட் கிடைக்காது. நாடு திரும்ப வேண்டியதுதான். இந்த உத்தரவை 2012ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப் போவதாக சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது.
சிங்கப்பூர் அரசின் இந்தப் புதிய கெடுபிடியால் கடுமையாக பாதிக்கப்படப் போவது இந்தியர்கள்தான். காரணம், இந்தியர்கள்தான் பெருமளவில் சிங்கப்பூரில் பணியாற்றுகின்றனர். அதிலும் 3000 டாலருக்குக் கீழ் சம்பளம் வாங்கக் கூடிய வேலைகளில் அதிகம் இருப்பவர்கள் இந்தியர்கள்தான். அவர்கள் அத்தனை பேரும் நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் 3800 இந்திய நிறுவனங்கள் உள்ளன.இங்கு பெரும்பாலும் இந்தியர்கள்தான் அதிகஅளவில் பணியாற்றுகின்றனர். மேலும் சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவீதம்பேர்தான் சிங்கப்பூர் குடிமக்கள். மீதமுள்ள 35 சதவீதம் பேரும் வெளிநாட்டவர்களே.
வெளிநாட்டவர்கள் பெருமளவில் சிங்கப்பூரில் வேலை பார்க்க வருவதால் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பு பறி போவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்தே இந்த நடவடிக்கையை சிங்கப்பூர் அரசு மேற்கொண்டுள்ளது.
இருப்பினும் சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெற்று பணியாற்றுவோருக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் கூறுகையில், உள்ளூர்வாசிகளின் நலனையும் நாம் பாதுகாக்க வேண்டியுள்ளது. எனவேதான் இந்த மாற்றம் என்று தெரிவித்தார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications