ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளே, பாபா ராம்தேவ் வெளியே

டெல்லி ஜேபி நரைன் பூங்காவில் நேற்று அன்னா ஹஸாரே தடையை மீறி உண்ணாவிரதம் இருக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் அதிகாலையிலேயே கைது செய்யப்பட்டார். இதையடுத்து நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பும், போராட்டங்களும் வெடித்தன. நாட்டின் அத்தனை மாநிலங்களிலும் ஹஸாரேவுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்தன.
அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டும் அவர் சிறையை விட்டு வெளியேற மறுத்து அங்கேயே உள்ளார். ஜேபி நரைன் பூங்காவில் நாங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நிபந்தனையற்ற அனுமதி தரப்பட வேண்டும் என்று அன்னா நிபந்தனை விதித்துள்ளார். அதை நிறைவேற்றாதவரை நான் சிறையிலிருந்து வெளியேற மாட்டேன் என்றும் அவர் கூறி விட்டார்.
இந்நிலையில் நேற்றிரவு வாழும் கலை அமைப்பின் நிர்வாகி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் திஹார் சிறைக்கு சென்றார். ஆனால் அன்னா ஹஸாரேவை சந்திக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நேற்று நள்ளிரவு திஹார் சிறைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியதாவது,
நான் அன்னா ஹஸாரேவை சந்திக்கத் தான் வந்தேன் என்றார்.
ஹஸாரேவின் கைது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, சுயநினைவோடு இருக்கும் யாரும் இந்த கைது நடவடிக்கையை சரி என்று சொல்வார்களா? என்று கேட்டார்.
ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு அன்னா விவகராத்தில் இரட்டைப் பேச்சு பேசுவது சரியில்லை என்று குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் இன்று காலை அன்னாவை சந்திக்க ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் திஹார் சிறைக்குள் சென்று அன்னா ஹஸாரேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பாபா ராம்தேவுக்கு அன்னாவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications