3 பேரை தாக்கிய இந்தியருக்கு 30 மாத சிறை விதித்தது ஆஸ்திரேலிய நீதிமன்றம்
மெல்பேர்ன்: ஆஸ்திரேலியாவில், 3 இந்தியர்களை தாக்கி காயப்படுத்திய இந்திய மாணவருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 30 மாத சிறைத் தண்டனையை விதித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்தவர் குர்தீப் சிங் மான் (25). ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியாவில் படித்து வந்தார். கடந்த 2009ம் ஜூன் மாதம் மெல்பேர்ன் நகரின் தென் பகுதியில் உள்ள கிரின்ஹன்டி என்ற சாலையில் வாகனத்தில் வேகமாக சென்றார். அப்போது, சாலையை கடந்த 3 இந்தியர்கள் மீது வாகனம் மோதியது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த 3 பேரும் இந்திய மொழியில் திட்டுவதை கேட்ட காரில் இருந்த குர்தீப் சிங்கும், அவரது நண்பரும், காரை சிறிது தூரத்தில் நிறுத்தினர். பின்னர் காரில் இருந்து இறங்கி சென்று, சாலையை கடந்தவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஆத்திரம் குறையாத இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது, குர்தீப் சிங் காரில் வைத்திருந்த சமையல் கத்தியை கொண்டு 3 பேரையும் தாக்கினார். அதில் அனைவரும் காயமடைந்தனர். இந்த வழக்கு, விக்டோரியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு பிறகு குற்றசாட்டப்பட்ட குர்தீப் சிங்கிற்கு 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதில், 18 மாதங்களுக்கு பரோலில் வெளியே வர முடியாது. சிறைத் தண்டனைக்கு பிறகு, குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக, குர்தீப் சிங் மான் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார் எனத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications