காஸ் குழாய் ஆய்வுக்காக வந்த அதிகாரிகளை சிறைபிடித்த அவிநாசி விவசாயிகள்
கோவை: அவிநாசி அருகே விளைநிலங்கள் வழியாக காஸ் பைப் லைன் அமைக்க ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை விவசாயிகள் சிறைபிடித்தனர்.
கோவை மாவட்டம், இருகூரில் இருந்து அவிநாசி வட்டாரத்தில் துலுக்கமுத்தூர், அய்யம்பாளையம், வடுகபாளையம், நடுவச்சேரி, கருமாபாளையம் உள்ளிட்ட பல ஊராட்சிகள் வழியே பெங்களூருக்கு எல்.பி.ஜி.காஸ் பைப் லைன் அமைக்கப்பட உள்ளது.
விளைநிலங்களுக்கு மத்தியில் 10 அடி ஆழத்தில், நான்கு மீட்டர் அகலத்தில் குழாய் அமைத்து, அதன் மேல் கான்கிரீட்டும் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆய்வு பணிகளில் ஈடுபட அதிகாரிகள் விவசாய நிலங்கள் வழியாக வந்தனர்.
அப்போது, தேசிய நெடுஞ்சாலை வழியே திட்டமிடப்பட்டிருந்த அந்த பைப் லைன், திடீரென்று கிராமங்களில் விவசாய நிலங்கள் வழியே அமைப்பதை ஏற்க முடியாது என கூறிய விவசாயிகள், அதிகாரிகளை சிறைபிடித்தனர்.
தகவலறிந்த இன்ஸ்பெக்டர் காளியண்ணன், இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில், எல்.பி.ஜி. நிறுவன உயர் அதிகாரிகளிடம் பேசி, பிரச்னையை சுமூகமாக தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் ஆய்வு பணிகளில் ஈடுபடாமல் திரும்பிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications