புதிய இந்திய ரூபாய் குறியீட்டுடன் புழக்கத்திற்கு வந்த நாணயங்கள்

$ என்பதைப் பார்த்தவுடன் அமெரிக்க டாலர் என்று கூறிவிடுவோம். ஆனால் இந்திய ரூபாய்க்கு மட்டும் இத்தனை ஆண்டுகளாக ஒரு குறியீடு என்பது இல்லாமல் இருந்து வந்தது. ஒரு வழியாக கடந்த ஆண்டு ரூபாய்க்கு குறியீடு கிடைத்தது. இதில் தமிழர்களுக்கு எல்லாம் பெருமை. ஏனென்றால் குறியீட்டை வடிவமைத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த உதயகுமார்.
ரூபாய் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு ஆகிவிட்டாலும் இன்னும் நாம் குறியீடு இல்லாத நாணயம், ரூபாய் நோட்டுக்களைத் தான் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் கடந்த மாதம் ரூபாய் குறியீடு உள்ள 1, 2, 5, 10 மற்றும் 50 பைசா நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அவை அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு மாதம் ஆகியும் பெருமளவில் புழக்கத்திற்கு வரவில்லை. மாதம் 80 மில்லியன் புதிய நாணயங்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. 6 பில்லியன் ரூபாய் குறியீடுள்ள நாணயங்களை வெளியிடுவது தான் ரிசர்வ் வங்கியின் இலக்கு.
இது வரை இங்கிலாந்து தான் பவுண்ட் குறியீட்டுடன் கூடிய நாணயங்களை வெளியிட்டுள்ளது. தற்போது குறியீட்டு நாணயங்களை வெளியிடும் இரண்டாவது நாடாக இந்தியா ஆகியுள்ளது.
நாணயங்களில் உள்ள குறியீடு வெள்ளி அல்லது தங்க நிறத்தில் இருக்கும். 10 ரூபாய் நாணயத்தில் மட்டும் இரண்டு நிறத்திலுமே இருக்கும்.


Click it and Unblock the Notifications
