சோழிங்கநல்லூரில் 187 ஏக்கரில் நிதி மற்றும் ஊடக நகரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அருகே சோழிங்கநல்லூரில் 187 ஏக்கர் பரப்பளவில் நிதி மற்றும் பொழுதுபோக்கு ஊடக நகரம் அமைப்பதற்கான தொழில் முனைவோரைத் தேர்ந்தெடுக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

திமுக ஆட்சியின் போது, சென்னை அருகே சோழிங்கநல்லூர் மற்றும் பெரும்பாக்கத்தில் நிதி நகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் நிதி நகரத்தை அமைப்பதற்கான பணிகளை அதிமுக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து, சட்டப் பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தொழில்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நிதிநகரம் மற்றும் ஊடக பொழுதுபோக்கு பூங்கா திட்டத்தை அமைக்க, சென்னை ராஜீவ்காந்தி சாலைக்கு அருகில் சோழிங்கநல்லூர் மற்றும் பெரும்பாக்கம் கிராமங்களில் சுமார் 187 ஏக்கர் நிலப்பரப்பு இனம் காணப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி பிரைஸ் வாட்டர் அவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை, டிட்கோ நிறுவனம் அரசுடன் கலந்தாலோசித்து இறுதி செய்யும்.

முதல் கட்டமாக, 25 ஏக்கர் நிலத்தில் நிதி நகரம் அமைக்க தொழில் முனைவோரைத் தேர்ந்தெடுக்கப்பதற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+