கலாநிதி மாறன் மீது புதிய புகார்!
சென்னை: சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் மீது ஏற்கெனவே தரப்பட்ட அனைத்து புகார்களும் வாபஸ் பெறப்பட்ட நிலையில், நேற்று ஒரு புதிய புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புகாரை தந்தவர் பெயர் அந்தோணி.
'எம்பயர் மூவிஸ்' என்ற பட நிறுவனத்தை நடத்தி வரும் இவர், நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகாரில், அதான்டா, இதான்டா என்ற பெயரில் ஒரு படம் தயாரித்தேன். பாண்டியராஜன், விவேக் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் தொலைக்காட்சி ஓளிபரப்பு உரிமையை ரூ.10 லட்சத்துக்கு சன் டி.விக்கு விற்பனை செய்தேன். ஆனால் படம் வெளிவருவதற்கு முன்பே சன் டி.வி.யில் இந்த படத்தை வெளியிட்டு விட்டதால், படத்தை வினியோகஸ்தர்கள் யாரும் வாங்க மறுத்து விட்டனர்.
இதனால் ரூ.1 கோடி வரை எனக்கு இழப்பு ஏற்பட்டது. இது பற்றி கேட்ட போது, என்னை மிரட்டினார்கள் என்றும், இது தொடர்பாக சன் டி.வி. நிர்வாக இயக்குனர் கலாநிதிமாறன், சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு ஏற்பட்ட நஷ்ட தொகையை வசூலித்து தர வேண்டும்," என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க, தென் சென்னை இணை போலீஸ் கமிஷனர் சண்முகராஜேஸ்வரனிடம் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications