2010ல் தீவிரவாதத்திற்குப் பலியான இந்தியர்கள் எண்ணிக்கை குறைவு: அமெரிக்கா
வாஷிங்டன்: இந்தியா மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளினால், கடந்தாண்டு இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, அமெரிக்க அறிக்கை தெரிவிக்கிறது.
2010ம் ஆண்டில் தீவிரவாதம் குறித்த அறிக்கையை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.
இதில் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் காஷ்மீர் மீது பாகிஸ்தானின் எல்லை தாண்டும் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்தாண்டு இதில், பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள் என 1,900 பேர் பலியாகினர். இதன்மூலம் உலகில் தீவிரவாத அச்சுறுதல் அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவும் தொடர்ந்து இடம் பெற்றுள்ளது.
ஆனால், கடந்தாண்டு உலக நாடுகளோடு சேர்ந்து தீவிரவாதத்தை எதிர்க்க இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளால், தீவிரவாத தாக்குதல்களில் இறப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் வெகுவாக குறைந்துள்ளது.
மும்பை தாக்குதலில் சிக்கிய தீவிரவாதி அஜ்மல் கசாப்பிற்கு கடந்த மே மாதம், மரணத் தண்டனை விதித்தது. மேலும் 2010ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கு கடும் அச்சுறுத்தல் இருந்தது. ஆனால், இந்தியா பாதுகாப்பு நடவடிக்கைகளில் திறன்பட செயல்பட்டதால், தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டன.
பாகிஸ்தான் எல்லை உள்பட நாட்டின் அனைத்து எல்லை பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி உள்ள இந்தியா, அதிகளவிலான தீவிரவாதிகளை கைது செய்துள்ளது. மறைத்து வைக்கப்பட்டிருந்த பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு, உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications