மணல் அள்ளுவதை கண்காணிக்க நீதிபதி பத்மநாபன் தலைமையில் கமிட்டி நியமனம்
மதுரை: தமிழகத்தில் உள்ள ஆறுகளில் மணல் கொள்ளையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் கமிட்டி அமைக்க மதுரை உயர்நீதி்மன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கானூரை சேர்ந்த உலகநாதன் என்பவர், தேனி அருகே வைகை ஆற்றில் மணல் அள்ள அனுமதி வழங்கிய ஆர்.டி.ஒ. உத்தரவை ரத்து செய்ய கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதேபோல, விருதுநகர், தேனி மாவட்ட ஆறுகளில் மணல் அள்ள தடை கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இவ்வழக்குகளின் விசாரணையின் போது, மணல் அள்ளுவதை கண்காணிக்க கமிட்டி அமைக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநில கண்காணிப்பு கமிட்டி நியமித்தது குறித்து அரசு கூடுதல் அட்வகேட் ஜெரனல் செல்லப்பாண்டியன் அறிக்கை சமர்ப்பித்தார். மணல் அள்ளுவதை கண்காணிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவின்படி ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் கமிட்டியை அரசு நியமித்துள்ளது.
மனுதாரர்கள் தங்களை குறைகளை இந்த கமிட்டியிடம் தெரிவிக்கலாம். அதன்மீது கமிட்டி நடவடிக்கை எடுக்கும். கமிட்டிக்கு தேவையான ஊழியர்கள், வசதிகளை முதன்மை செயலாளர் செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
-
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
முதலாளியாக சூப்பர் சான்ஸ்.. 1.50 கோடி வரை மானியம்! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு! எப்படி பெறுவது? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications