தொட்டால் தற்கொலை செய்வேன்: முதலிரவில் கணவரை மிரட்டிய புதுப்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்
பள்ளிபாளையம்: என்னைத் தொட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று முதல் இரவில் கணவரை மிரட்டிய புது மணப்பெண் மாயமாகியுள்ளார். அவரைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கணவன் போலீசில் புகார் செய்துள்ளார்.
வெடியரசம்பாளையம் சிவக்குமார்
பள்ளிபாளையம் அருகே உள்ள வெடியரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (28). தறி தொழிலாளி. அவர் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி ஈரோட்டைச் சேர்ந்த பைரவி (23) என்ற பெண்ணை பெரியவர்கள் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டார். முதலிரவும் வந்தது. ஆசையுடன் மனைவியை நெருங்கிய சிவக்குமாருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், என்னைத் தொட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பைரவி மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 30-ம் தேதி தாலியைக் கழற்றி வைத்துவிட்டு திடீரென அவர் மாயமாகிவிட்டார்.
மனைவியைத் தேடி அலைந்த சிவக்குமார் தற்போது போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனக்கும் பைரவிக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் தான் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி திருமணம் நடந்தது. முதல் இரவில் நான் பைரவியிடம் பேச்சு கொடுத்த போது அவர் என்னை தொட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.
நான் முதலில் இப்படித்தான் இருக்கும் போக, போக சரியாகி விடும் என்று நினைத்து வழக்கம் போல் தினமும் வேலைக்கு சென்று வந்தேன். பைரவியிடம் அன்பாக பழகினேன். ஜூன் மாதம் 30-ம் தேதி வழக்கம் போல் நான் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினேன். அப்போது வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கு பைரவியைக் காணவில்லை. நான் கட்டிய தாலியை கழற்றி வைத்து விட்டு மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
கடந்த 2 மாதமாக அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே, அவரை மீட்டுத் தரவேண்டும் என்று கூறியுள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications