ஜன் லோக்பால்: தனி நபர் மசோதாவாக லோக்சபாவில் தாக்கல் செய்கிறார் வருண்
டெல்லி: அன்னா ஹஸாரே குழுவினர் தயாரித்துள்ள ஜன் லோக்சபா மசோதாவை தனி நபர் மசோதாவாக லோக்சபாவில் தாக்கல் செய்யப் போவதாக வருண் காந்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் அன்னா ஹஸாரேவின் போராட்டம் வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது. ஒருவர் நாட்டின் நலனுக்காக போராடும்போது அதைப் பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது.
அன்னா ஹஸாரேவின் குழு தயாரித்துள்ள ஜன் லோக்பால் மசோதா சிறப்பானது. அதை நான் லோக்சபாவில் தனி நபர் மசோதாவாக தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளேன்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜுடன் விவாதித்துள்ளேன். இதன் மூலம் ஜன் லோக்பால் மசோதாவை குறைந்தது நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வர நான் உதவினேன் என்ற மகிழ்ச்சி எனக்குக் கிடைக்கும்.
இதற்கு முன்பு இருந்த சட்டங்களை விட இந்த மசோதா சிறந்தது என்பதில் சந்தேகம் இல்லை. வெளியில் இறங்கிப் போராடுவதை விட நாடாளுமன்றத்திற்குள் இந்த மசோதாவை இப்படியாவது கொண்டு செல்ல நான் விரும்புகிறேன் என்றார் வருண்.
பாஜகவைச் சேர்ந்த வருண் காந்தி உ.பி. மாநிலம் பிலிபித் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. லோக்சபா தேர்தல் சமயத்தில் இவரது பேச்சுக்கள் பெரும் பிரளயத்தையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தின. இதையடுத்து அவர் அமைதியாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் ஜன் லோக்பால் மசோதாவை தனி நபர் மசோதாவாக லோக்சபாவில் தாக்கல் செய்யப் போவதாக அவர் அறிவித்துள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!











Click it and Unblock the Notifications