9 சதவீத வளர்ச்சி சாத்தியம்தான், கொஞ்சம் கடின முடிவுகளை எடுத்தால்! - மன்மோகன்சிங்
டெல்லி: 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் கடுமையான முடிவுகளை நாம் எடுத்தால் 9 சதவீத வளர்ச்சி சாத்தியமானதே என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
12 வது ஐந்தாண்டு திட்ட மசோதாவை இறுதி செய்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் திட்டக் கமிஷன் கூட்டம் டெல்லியில் நடந்தது. கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "கடந்த 11வது ஐந்தாண்டு திட்டத்தில் விவசாய முன்னேற்றம் 3.3 சதவீதமாக முடிவடைந்தது.
வருகிற 12 வது ஐந்தாண்டு திட்டத்தில் கடுமையான முடிவுகளை மேற்கொண்டால் 9 சதவீத வளர்ச்சியை எட்டுவது சாத்தியம். மேலும் பணவீக்கத்தை தவிர்க்க வருகிற 12 வது ஐந்தாண்டு திட்டத்தில் விவசாயத்துறையில் 4 சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டியது அவசியம். அரசு திட்டங்களை நடைமுறைபடுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
உள் கட்டமைப்பு பணிகளில் அரசு - தனியார் கூட்டு முதலீடு அவசியம். இதன் மூலம் தற்போது இத்துறையில் நிலவும் பற்றாக்குறையை சரிகட்ட முடியும்", என்றார்.
இப்போது 12வது ஐந்தாண்டு திட்ட ஆவணப் பணிகள் முடிந்ததும், அமைச்சரவை மற்றும் தேசிய வளர்ச்சிக் கவுன்சிலுக்கு அனுப்பி திட்டத்துக்கான ஒப்புதல் கோரப்படும்.












Click it and Unblock the Notifications