லாரி ஸ்ட்ரைக்: நாமக்கல்லில் மட்டும் பாதிப்பு-10 கோடி முட்டைகள் தேக்கம்!

Subscribe to Oneindia Tamil

Eggs
நாமக்கல்: தென்னக லாரி ஸ்ட்ரைக் காரணமாக தமிழகத்தின் முக்கிய பகுதிகள் பாதிக்கப்படாவிட்டாலும், முட்டை உற்பத்தி கேந்திரமாக திகழும் நாமக்கல்லில் 10 கோடி முட்டைகள் தேங்கக் காரணமாகிவிட்டது.

தமிழ்நாடு, புதுவை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் 2-வது நாளாக நீடிக்கிறது. இவர்களுக்கு ஆதரவாக ரிக் உரிமையாளர்கள் சங்கம், கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளன.

தென் மாநிலங்களில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து முடங்கியது. போராட்டத்திற்கு தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் நேற்றும், இன்றும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றுள்ளனர். இதனால் முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

2 நாட்களாக சுமார் 10 கோடி முட்டைகள் நாமக்கல்லில் தேங்கி உள்ளன. இவை ஆங்காங்கே குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் நல்லதம்பி கூறுகையில், "முட்டைகளை பாதுகாத்து வைக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் முட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு வேலை நிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

சத்துணவு திட்டத்துக்கு தேவையான முட்டை கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் இன்று 2-வது நாளாக நீடிப்பதால் சேலம், நாமக்கல் பகுதியில் காய்கறி விலையும் உயர தொடங்கியிருக்கிறது.

லாரி தொழில் மூலம் அரசு மற்றும் லாரி உரிமை யாளர்களுக்கு தினமும் ரூ. 3500 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும். இன்றுடன் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூ. 2 ஆயிரம் கோடிக்கு பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. லாரி ஸ்டிரைக் காரணமாக ஈரோட்டில் மஞ்சள் விற்பனை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மஞ்சள் மண்டிகளில் தினசரி ஏலம் விடப்படும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து இந்த ஏலத்தில் கலந்து கொண்டு மஞ்சளை வாங்கி செல்வார்கள்.

ஆனால் இப்போது லாரி ஸ்டிரைக் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மஞ்சள் ஏலம் நடைபெறாததால் சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள மஞ்சள் தேக்கம் அடைந்துள்ளது.

நேற்று முதல் மஞ்சள் ஏலம் விடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் முடிந்ததும் மஞ்சள் ஏலம் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது போல ஜவுளி விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சென்னை போன்ற பகுதிகளில் லாரி போக்குவரத்து சீராக உள்ளது. காய்கறிகள் வழக்கம்போல வந்தன. இதனால் சென்னையில் விலை உயரவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+