வலுவான லோக்பால் குறித்துப் பரிசீலனை! - பிரதமர் உறுதி

மத்திய அரசு தற்போது விவாதத்துக்கு வைத்துள்ள லோக்பால் மசோதாவில் பிரதமர் பதவியைச் சேர்ப்பதற்கு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார் மன்மோகன் சிங். இருப்பினும் அது தனது தனிப்பட்ட கருத்து எனவும், கொள்கை அளவிலான முடிவு அல்ல என்றும் முன்னர் கூறியிருந்தார்.
தற்போது, ஊழலுக்கு எதிரான போராட்டக்களம் வலுவடைந்ததை அடுத்து, மீண்டும் தன் கருத்தை வலியுறுத்தியுள்ளார் பிரதமர். தற்போது ஊழலுக்கு எதிரான ஒரு வலுவான சட்டமியற்றக்கூடிய நேரம்தான் என்றார் அவர்.
"அண்ணா ஹசாரே இந்த மாத இறுதிக்குள் லோக்பால் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அது பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது. ஒரு வலுவான மற்றும் பயனுள்ள லோக்பாலை செயல்படுத்த அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். இதில் எந்த தடைகள் இருந்தாலும் அதனை அகற்ற வேண்டும்," என்றார் மன்மோகன் சிங்.
இதற்கிடையே, அரசின் லோக்பால் மசோதா குறித்து பொதுமக்களின் கருத்துக் கேட்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த 15 நாட்கள் வரை இதுகுறித்த தங்கள் கருத்துக்களோ, யோசனைகளை மக்கள் அரசிடம் தெரிவிக்கலாம்.












Click it and Unblock the Notifications