வட தமிழகம் முழுவதும் இடியுடன் பலத்த மழை-மேலும் நீடிக்கும்
சென்னை தமிழகத்தின் வட மாவட்டங்களில் நேற்று இரவு நல்ல மழை பெய்துள்ளது. பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை இரவு முழுவதும் பெய்தது. கடல் சீற்றமும் காணப்படுகிறது.
தமிழகத்தின் வட பகுதியில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் கனத்த மழை பெய்துள்ளது.
பல பகுதிகளில் விடிய விடிய இடியுடன் கூடிய கன மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக குறுவை சாகுபடி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதிகபட்சமாக செம்பரம்பாக்கத்தில் 10 செமீ மழையும், சோழவரம், பள்ளிப்பட்டில் 8 செமீ மழையும் பதிவானது.
இந்த மழை காரணமாக சென்னை நகரின் பல பகுதிகளில் சாலையில் வெள்ளம் போல மழை நீர் ஓடியது.
கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பும் காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் மீனவர்கள் கடலுக்குப் போகவில்லை.
வெப்பச் சலனம் காரணமாக இந்த மழை பெய்துள்ளதாகவும், மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications