300 ஏக்கரில் ஸ்ரீபெரும்புதூரில் விமான உதிரிபாகங்கள் தயாரிப்பு பூங்கா!
சென்னை: சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் 100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான விமான தளவாடங்கள் தயாரிப்பு பூங்கா (ஏரோஸ்பேஸ் பார்க்) அமைக்கிறது தமிழக அரசு நிறுவனமான டிட்கோ.
தமிழகத்தின் தொழில்வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அரசு நிறுவனமான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன தொழில்களை தொடங்கி மேம்படுத்தலாம்? என்று தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், ஆசிய அளவில் மிகப்பெரிய தொழில்கேந்திரமாக உருவாகி வரும் ஸ்ரீபெரும்புதூரில் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் மிகப்பெரிய பூங்காவை அமைக்க டிட்கோ திட்டமிட்டு வருகிறது.
இதற்குத் தேவைப்படும் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தேர்வு செய்து தருமாறு மற்றொரு அரசு நிறுவனமான சிப்காட் (தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக்கழகம்) நிறுவனத்தை டிட்கோ கேட்டிருக்கிறது.
ஏரோஸ்பேஸ் பார்க் அமைப்பது தொடர்பான ஆய்வுப்பணி எல் அண்ட் டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா முழுக்க முழுக்க விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளையும், உதிரி பாகங்களை இணைக்கும் தொழிற்சாலைகளையும் கொண்டிருக்கும்.
ஏற்கனவே, பன்னாட்டு வாகனங்கள் மற்றும் செல்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இயங்கி வரும் ஸ்ரீபெரும்புதூரில் புதிதாக ஏரோஸ்பேக் பார்க் வருவதால் தொழில்வளர்ச்சி மேலும் அதிகமாக இருக்கும். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications