ஜன் லோக்பாலை நிறைவேற்ற முடியாவிட்டால் மத்திய அரசு பதவியிலிருந்து விலகட்டடும்: அன்னா

டெல்லியில் 7வது நாளாக இன்று அன்னாவின் உண்ணாவிரதம் தொடர்கிறது. அவருக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. நாடு முழுவதும் முக்கிய நகரங்கள், கிராமங்களில் ஹஸாரேவுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லியிலும் அன்னா உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்லீலா மைதானத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது. நேற்று மாலையில் கிட்டத்தட்ட 50,000க்கும் மேற்பட்டோர் திரண்டு அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இரவு 8 மணியளவில் ஆதரவாளர்களிடையே அன்னா பேசினார். அப்போது அவர் அரசுக்கு இறுதிக் கெடு விதித்தார். அன்னா பேசுகையில்,
இந்த அரசு தூய்மையானதாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் 30ம் தேதி வரை உங்களுக்கு அவகாசம் தருகிறோம். அதற்குள் ஜன் லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்துங்கள். இதைச் செய்ய முடியாவிட்டால் பதவியிலிருந்து விலகுங்கள். இனியும் பேச்சுவார்த்தை நடத்துவதில் பலன் இல்லை.
ஆகஸ்ட் 30ம் தேதி வரைதான் நாங்கள் பொறுப்போம். அதற்குப் பிறகு மிகப் பெரிய புரட்சி வெடிக்கும். நாடு தழுவிய மாபெரும் போராட்டத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்த நாட்டுக்காக நான் நிறைய தியாகங்களைச் செய்து விட்டேன். நாட்டுக்குச் சேவை செய்வதற்காக நான் திருமணம் கூட செய்யவில்லை. ஆனால் நீங்கள்தான் (ஆதரவாளர்களைப் பார்த்து) எனது குடும்பம்.
கடந்த 74 ஆண்டு காலத்தில், என் மீது எந்த களங்கமும் வந்ததில்லை. நான் சுத்தமானவன். அதுதான் ஊழலை எதிர்த்து நான் போராட எனக்கு துணை நிற்கும் ஆயுதமாகும் என்றார் ஹஸாரே.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications