8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை
நெல்லை: 8-ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஆதிருமாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகன் பிரசாந்த். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
பிரசாந்த் தனது வீட்டருகே 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்தார். அந்த மாணவிக்கு சமீபத்தில சடங்கு நடந்தது. இந்த விழாவில் பக்கத்து வீடு என்ற உரிமையில் கலந்து கொண்ட பிரசாந்த் மாணவிக்கு தங்க கம்மல் பரிசு கொடுத்துள்ளார். இது மாணவியின் பெற்றோர் மற்றும் அண்ணனுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
அவர்கள் பிரசாந்த்தை அழைத்து ஏன் இந்த பரிசை கொடுத்தாய் என்று சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரசாந்த்தை அவரது பெற்றோர் களக்காடு அருகே உள்ள மாவடிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள உறவினர்கள் வீட்டில் தங்க வைத்தனர். பின்பு பிரச்சனை தொடர்பாக இரு வீட்டாரும் சமரசமாக பேசி வந்தனர்.
இந்த நிலையில் பிரசாந்த் மாவடியில் உள்ள 120 அடி உயர செல்போன் டவரில் ஏறி அதன் உச்சியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications