ஆட்சியைக் கலைக்கவோ, கலவரத்தை ஏற்படுத்தவோ நாங்கள் முயலவில்லை- கேஜ்ரிவால்
டெல்லி: நாங்கள் மத்திய ஆட்சியைக் கலைக்கவும், கலவரத்தை ஏற்படுத்தவும் முயல்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அவதூறானாவை, உள்நோக்கம் கொண்டவை. மிக மிக அமைதியாக போராடுமாறு மட்டுமே நாங்கள் மக்களை கேட்டு வருகிறோம் என்று அன்னா ஹஸாரே குழுவின் முக்கிய உறுப்பினரான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
இதுகுறித்து கேஜ்ரிவால் கூறுகையில்,
சிலர் எங்களது போராட்டத்தை திசை திருப்பும் வகையில், அவதூறான, துவேஷமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். ஆட்சியை சீர்குலைக்கும் வகையிலும், கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியைக்கலைக்கச் செய்யும் வகையிலும் நாங்கள் நடந்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
கலவரத்தில் ஈடுபடுமாறு யாரையும் அன்னா தூண்டவில்லை. வன்முறையில் ஈடுபடுமாறு யாரிடமும் அன்னா கூறவில்லை. அமைதியான வழியில் போராடுங்கள். எம்.பி்க்க்கள், அமைச்சர்களுக்கு நமது கோரிக்கை தெரியும் வகையில் அமைதியான முறையி்ல அவர்களது வீடுகளை முற்றுகையிட்டு தர்ணா போராட்டங்கள் நடத்துங்கள் என்றுதான் அன்னா கூறியுள்ளார். இந்த அமைதியான போராட்டத்தைக் கூட செய்ய அனுமதி இல்லாவிட்டால் பிறகு என்ன ஜனநாயகம்?
ஜனநாயகம் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச் சாவடிக்குப் போய் ஓட்டுப் போட்டு வருவது அல்ல. உங்களது தலைவிதியை மற்றவர்கள் நிர்ணயிப்பார்கள் என்று கண்மூடித்தனமாக ஒப்படைத்து விட்டு வருவது ஜனநாயகமல்ல என்றார் அவர்.
குடிபோதையில் 30 பேர் ரகளை
முன்னதாகநேற்று இரவு அன்னா ஹஸாரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராம்லீலா மைதானத்திற்கு அருகே சிலர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. அவர்களில் ஒருவர், பத்திரிக்கையாளர்களை நோக்கி வந்து ஆபாசமாக பேசினார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும் அவர் திட்டினார். இதையடுத்து அவர்களை போலீஸார் அங்கிருந்து வெளியேற்றி அப்புறப்படுத்தினர்.
கிட்டத்தட்ட 30 பேரை குடிபோதையில் இருந்ததாக போலீஸார் அங்கிருந்து வெளியேற்றினர்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications