மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி

தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானி ஆந்திர மாநிலம் நெல்லூரில் பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பேசுகையில்,
பிரதமர் மன்மோகன் சிங்கால் சாதாரண மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முடியாது. காரணம் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவில்லை. மாறாக ராஜ்யசபா வழியாக நாடாளுமன்றத்துக்குள் வந்தவர். தேர்தலில் போட்டியிட்டு, மக்கள் ஓட்டு போட்டு, அதில் அவர் வெற்றி பெற்றிருந்தால், மக்களைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்கும்.
பிரதமர் சிறந்த பொருளாதார நிபுணர் தான். அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இவரது ஆட்சியில் இங்கு வாழும் சாதாரண அடிமட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர்.
ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்ட மன்மோகன் சிங்குக்கு, மக்களின் வறுமை பற்றியோ, சாதாரண மக்களின் அடிப்படை தேவை பற்றியோ தெரிய வாய்ப்பில்லை.
இந்த அரசு அதிகாரத்திற்கு வந்த நாள் முதலே விலைவாசி மேலே போய்க் கொண்டேயிருக்கிறது.
இந்த ஆட்சியின் காலத்தில் தொடர்ச்சியாக பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவும், பிரதமரும்தான் பொறுபு.
ஸ்பெக்ட்ரம் ராஜா-கனிமொழி, காமன்வெல்த் கல்மாடி ஆகியோர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு பொதுக்கணக்கு குழுவின் அறிக்கையும், நீதிமன்ற நடவடிக்கையும்தான் காரணம்.
நாங்கள் (மத்திய அரசு) ஊழலுக்கு எதிரானவர்களை சிறைக்கு அனுப்பி வருகிறோம் என்று சொல்வது சுத்தப்பொய். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே, அவர்கள் பதவி விலகியிருக்கிறார்கள். இதை பிரதமர் என்ற முறையில் மன்மோகன் சிங், ஏற்கனவே செய்திருக்க வேண்டும்.
ஊழல், விலைவாசி, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் பிரதமர் பதவியில் நீடிக்க தார்மீக உரிமையை இழந்து விட்டார் மன்மோகன் சிங். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications