பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்
சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி கை எழுத்து பிரச்சாரமும், ஆர்பாட்டமும் நடந்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் கருணை மனுக்கள் நிராகரி்க்கப்பட்டதையடுத்து அவர்கள் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஆளுநரிடம் இருந்து ஆணை வந்தவுடன் அவர்கள் தூக்கில் இடப்படுவார்கள்.
இந்நிலையில் அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் குரல் எழுப்பியுள்ளன.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வாழும் தமிழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பிரிமான்ட் நகரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சான் ஒசே, சன்னிவேல் உள்ளிட்ட பல நநரங்களில் இருந்து தமிழர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிய கோரிக்கை மனுவில் கையெழுத்து வாங்கினர். இந்திய தூதரகத்தின் மூலம் இந்த கோரிக்கை மனு இந்திய அரசிற்கும், தமிழக முதல்வருக்கும் அனுப்பி வைக்க இருப்பதாக தெரிவித்தனர்.
மரண தண்டனைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போர்டுகளை ஏந்தி பிரிமான்ட் சென்ட்ரல் பூங்காவை சுற்றி ஊர்வலமாகச் சென்றனர். பல இன மக்களுக்கும் போராட்டத்திற்கான காரணத்தை ஆர்வமாக கேட்டறிந்து, தமிழர்களின் இப்போராட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தனர்.
இந்த ஆர்பாட்டத்தை ஒருகிணைத்த தமிழ் உணர்வாளர்கள், இந்த விஷயத்தில் தமிழக முதலமைச்சர் தலையிட்டு ஆளுநர் மூலம் மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications