மலைகளுக்கு உள்ளே, பூமிக்கு அடியில் ஈரானின் அணு ஆராய்ச்சி மையம்!
இதனால் ஈரானின் அணு ஆராய்ச்சிகளின் நோக்கம் குறித்த சந்தேகம் மேலும் வலுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மின்சார உற்பத்திக்காகவும், புற்றுநோய் சிகிச்சைக்காகவும் அணு ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளதாகவும், அங்கு யுரேனியத்தை சுத்தப்படுத்தி வருவதாகவும் ஈரான் கூறுகிறது.
ஆனால், அணு குண்டு தயாரிக்கவே யுரேனியத்தை சுத்தப்படுத்தும் வேலைகளில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
ஈரானின் மையப் பகுதியில் உள்ள நடான்ஸ் மாகாணத்தில் தான், அந் நாட்டின் முக்கிய அணு ஆராய்ச்சி மையம் உள்ளது.
இந்த மையத்தின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் எந்த நேரமும் விமானத் தாக்குதல்களை நடத்தலாம் என்ற அச்சம் உள்ளது. இந் நிலையில், ஈரான் மிக ரகசியமாக தனது அணு ஆராய்ச்சி மையத்தை புனித நகரான குவாம் அருகே உள்ள போர்டோ என்ற இடத்தில் மலையைக் குடைந்து, பூமிக்கு அடியில் மிகப் பாதுகாப்பான இடத்துக்கு இடம் மாற்றியுள்ளது.
இத் தகவலை அந் நாட்டின் துணை அதிபரும் அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான பெரெய்தோன் அப்பாசி உறுதிப்படுத்தியுள்ளார். தாக்குதல்களில் இருந்து மையத்தைக் காப்பாற்ற மிகுந்த பாடுபட்டு இந்த மையத்தை பூமிக்கடியில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
யுரேனியத்தை 3.5 சதவீதம் அளவுக்கே சுத்தப்படுத்துவதாக ஈரான் கூறுகிறது. ஆனால், அதை 20 சதவீதத்துக்கும் அதிகமாகவே சுத்தப்படுத்தி வளப்படுத்தி வருவதாக அமெரிக்கா கூறுகிறது. அணு ஆயுதங்கள் தயாரிக்க யுரேனியத்தை மிக அதிகளவில் வளப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் ஈரான் தனது ஆராய்ச்சி மையத்தை பூமிக்கடியில் இடம் மாற்றியுள்ளது அந்த நாட்டின் மீதான சந்தேகத்தை அதிகரிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!













Click it and Unblock the Notifications