2 மீனவர்கள் 5 ஆண்டுகளாக மாயம்- மாஜி திமுக அமைச்சர் கே.பி.பி. சாமியிடம் விசாரணை?

சென்னை திருவொற்றியூர் கேவி குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் செல்லத்துரை, வேலு இருவரும் 2006ம் ஆண்டு மாயமானார்கள். இந்த மீனவர்களின் குடு்ம்பத்தினர் சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து கொடுத்த புகார் மனுவில்,
செல்லத்துரை, வேலு ஆகியோர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். இதற்கு முன்னாள் தி.மு.க. அமைச்சர் கே.பி.பி. சாமியும், அவரது குடும்பத்தினரும்தான் காரணம் என்று கூறியுள்ளனர்.
2006ல் மீனவர்கள் உதவி நிதியை மோசடி செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து செல்லத்துரையும், வேலுவும் மாயமாகியுள்ளனர். அப்போது கிராமத் தலைவராக இருந்தவர் கே.பி.பி. சாமி. எனவே அவரது குடும்பத்தினருக்கும் மீனவர்கள் மாயமானதுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, போலீஸார் விசாரணை நடத்தி செல்லத்துரை மாயமானது தொடர்பாக கேவி குப்பம் பகுதியைச் சேர்ந்த சுந்தரராஜ் (21), டைசன் (19) ஆகியோரைக் கைது செய்தனர்.
இவர்கள் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், செல்லத்துரையை 7 பேர் சேர்ந்து அடித்து உதைத்து பாண்டிச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே கடலில் வீசினோம் என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமியின் தம்பி சங்கர் உள்பட சிலர் சம்பந்தப்பட்டு இருந்ததாகவும் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து கே.பி.பி. சாமியிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் அவர் கைதாக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications