நகரங்கள், கிராமங்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கி தமிழ்ப் பெயர்களை சூட்ட அரசு முடிவு
சென்னை : தமிழகத்தில் உள்ள ஜாதிப் பெயர்களை, குறிப்பாக பல கிராமங்களில் உள்ள ஊர்களின் ஜாதிப் பெயர்களை நீக்கி விட்டு அவற்றுக்குப் பதில் நல்ல தமிழப் பெயர்களை சூட்ட அரசு முடிவு செய்துள்ளது.
ஜாதி ஒழிய வேண்டும், மதச்சார்பு அழிய வேண்டும் என்று என்னதான் நாம் குரல் கொடுத்து வந்தாலும், இன்னும் ஜாதிகளை நம்மால் ஒழிக்க முடியவில்லை. அரசியல்வாதிகளே தேர்தல் சமயத்தில் ஜாதிகளை நம்பித்தான் பிழைப்பு நடத்துகின்றனர்.
இந்த நிலையில் ஊர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக கிராமங்களில் இந்த நடவடிக்கை தொடங்கவுள்ளது.
அந்தந்த கிராம அளவில் ஊராட்சி தலைவர், தலைமை ஆசிரியர், பிரமுகர்கள் தலைமையில் குழு அமைக்கப்படும். இக்குழுவினர் ஊரின் பெயரை மாற்ற, கிராமத்தினரிடம் கருத்து கேட்பர். பெயர்கள் கலெக்டர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டு, அரசு கெஜட்டில் வெளியிடப்படும். முதற்கட்டமாக, ஜாதியின் பெயரில் உள்ள ஊர்களின் பட்டியலை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது அரசு.
ஏற்கனவே முன்பு சென்னை நகரில் உள்ள தெருக்களின் பெயர்களில் இருந்த ஜாதிகளை நீக்கியது தமிழக அரசு என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் தமிழக அளவில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications