ஜன் லோக்பால் மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பியது மத்திய அரசு

இக் கூட்டத்தி்ல், அனைத்துக் கட்சியினரும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அன்னா ஹசாரேவுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ராம்லீலா மைதானத்தில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹஸாரேவின் உடல் எடை வெகுவாக குறைந்து விட்டது. இருப்பினும் அவரது நிலைமை மோசமாகவில்லை. அதேசமயம், அன்னாவின் உடல் நிலை மோசமடையும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து மத்திய அரசுத் தரப்பில் விரைவான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழு அன்னா குழுவுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளது. அவரச கூட்டங்கள் அதி வேகமாக நடந்து கொண்டுள்ளன.
இந்த ஆலோசனைகளின்போது சில முக்கிய விஷயங்களில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதன்படி பிரதமர் பதவியை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசுத் தரப்பில் இறங்கி வந்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல சிபிஐ, தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆகியவையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வரப்படும்.
இருப்பினும் நீதித்துறையை லோக்பால் வரம்பிலிருந்து விலக்கி வைக்க அன்னா தரப்பு ஒத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக நீதித்துறையை கண்காணிக்க தனிச் சட்டம் கொண்டு வரவும் மத்திய அரசுக்கு அன்னா தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. அதுகுறித்து பரிசீலிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசுத் தரப்பு, குறிப்பாக பிரதமர் பதவியை சேர்க்க ஒத்துக் கொண்டுள்ளதால், அன்னா தரப்பு திருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். இக் கூட்டம் இன்று மாலை நடந்தது. அதில் ஜன் லோக்பால் மசோதாவை நாடாளுமன்ற நிலைக குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இனி இந்தக் கமிட்டி அதை ஆராய்ந்து, ஏற்றுக் கொண்டால் அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அனுமதி தரும். அல்லது அதில் திருத்தங்கள் செய்யுமாறு இந்தக் கமிட்டி கோரும்.
இதற்கிடையே தொடர் உண்ணாவிரதத்ததால் அன்னாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து குளுகோஸாவது ஏற்றிக் கொள்ளுங்கள் என்று அன்னாவை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால், உயிரை விட்டாலும், விடுவேன் குளுகோஸ் ஏற்றிக்கொள்ள மாட்டேன் என்று அன்னா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications