For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியையை பணி நீக்கம் செய்ய மாணவியர் போராட்டம்

Google Oneindia Tamil News

கோவை: கோவை அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியை பணி நீக்கம் செய்யக் கோரி, மாணவியர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள வைரம் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் புவனேஸ்வரி (20). கோவை பி.என்.பாளையம் ரோடு அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் ஐ.சி.இ படித்து வருகிறார். கல்லூரியில் ஆசிரியை பாடம் நடத்திய போது புவனேஸ்வரியுடன் படிக்கும் சக மாணவி வகுப்புக்கு தாமதமாக வந்தார். இதை ஆசிரியை சுகந்திராணி கண்டித்து, அவரை வகுப்பை விட்டு வெளியே நிறுத்தினார்.

ஆனால் சிறிது நேரத்தில் வெளியேற்றப்பட்ட மாணவியர் மீண்டும் வகுப்புக்குள் வந்தார். புவனேஸ்வரி சைகை காட்டியதால் தான் அவர்கள் உள்ளே வந்ததாக கருதிய ஆசிரியை, அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். இதில் படுகாயமடைந்த அவரை சக மாணவியர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவியை தற்கொலைக்கு துண்டிய ஆசிரியை சுகந்திராணியை பணி நீக்கம் செய்ய கோரி சகமாணவியர் வகுப்புகளை புறக்கணித்து பாலிடெக்னிக் வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

English summary
Coimbatore government women's polytechnic college girls boycotted the classes and demanded to suspend, college lecturer Suganthi Rani. Earlier, the lecturer scolded student Buvaneshwari. She attempted for suicide and injured. Police are investigating.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X