ரயில்வே பாலத்தில் அந்தரத்தில் தொங்கிய தீயணைப்பு வண்டியால் பரபரப்பு
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வாகனம் ரயில்வே பாலத்தில் அந்தரத்தில் தொங்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாக்குமரி அடுத்த சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நின்ற சில படகுகளில் நேற்றிரவு தீப்பிடித்ததாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
அதன்பின் நாகர்கோவிலுக்கு திரும்பும் வழியில், சுசீந்திரம் அடுத்த ஆஸ்ரமம் அருகே உள்ள ரயில்வே பாலத்தில் தீயணைப்பு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, தீயணைப்பு வாகனத்தை பின்தொடர்ந்து வந்த ஒரு வாகனம் முந்தி சென்றது.
அதற்கு வழிவிட்டபோது, தீயணைப்பு வாகனம் திடீரென கட்டுபாட்டை இழந்து, ரயில்வே பாலத்தின் பக்க தடுப்பு சுவரை இடித்து உடைத்து அந்தரத்தில் தொங்கி நின்றது. அப்போது, பாலத்தின் கீழே பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
தீயணைப்பு வாகனம் பாலத்தில் அந்தரத்தில் நிற்பதை கண்ட ரயில் டிரைவர், விபத்து ஆபத்தை தவிர்க்க, ரயிலை மெதுவாக இயக்கினார். தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் மீட்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயணைப்பு வாகனத்தில் இருந்த 3 வீரர்களும், வாகனமும் மீட்கப்பட்டது. ரயில்வே பாலத்தில் தொங்கியபடி நின்ற தீயணைப்பு வாகனத்தை கண்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications