தூக்கு தண்டனையை ரத்து செய்வது ஜெயலலிதா கையில் தான் உள்ளது: டாக்டர் கிருஷ்ணசாமி
நெல்லை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் 3 பேரின் உயிர் காக்கப்படுவது முதல்வர் ஜெயலலிதாவின் கையில் தான் உள்ளது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் தீர்மானம் உள்பட தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதனால் உலக தமிழர்கள் மத்தியில் ஜெயலலிதா மீதான மரியாதை உயர்ந்திருக்கிறது.
எனவே, அவருக்கு இந்த விஷயத்தில் இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்துவது தமிழக முதல்வரின் கையில் தான் உள்ளது.
இதற்கு முன்பு கேரளாவில் சி.ஏ. பாலன் தூக்கு தண்டனையும், ஆந்திராவில் 2 பேரின் துதூக்கு தண்டனையும் ரத்தாகியிருக்கிறது. எனவே, இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 16-ன்படி தமிழக அரசு மேற்கொள்ளும் முடிவின் அடிப்படையில் தூக்கு தண்டனை கைதிகள் விடுவிக்கப்படலாம். எனவே, தமிழக அரசு அதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications