போலீசாரின் திடீர் சோதனை: சென்னை லாட்ஜுகளில் 58 கிலோ வெள்ளி பணம் சிக்கியது
சென்னை: சென்னையில் உள்ள தங்குவிடுதிகளில், போலீசாரின் திடீர் சோதனையில் 58 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 26 லட்சம் பணம் ஆகியவை சிக்கியது. இது தொடர்பாக மேற்குவங்கத்தை சேர்ந்த வாலிபரிடம் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் நடந்து வரும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், நகரின் பல பகுதிகளில் உள்ள தங்குவிடுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, சவுகார்பேட்டையில் உள்ள என்.எஸ்.சி.போஸ்., சாலையில் உள்ள விடுதி ஒன்றில், மேற்குவங்கத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த ரஞ்சித் குமார் (26) என்ற அந்த வாலிபர் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனையிட்டனர். அதில், 58 கிலோ மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் மற்றும் வெள்ளிக் கட்டிகளை கண்டுபிடித்தனர். மேலும், 26 லடசம் ரூபாய் பணத்தையும் கைப்பற்றியது.
இது குறித்து விசாரித்த போது, ரஞ்சித் குமார் தெளிவான பதிலோ, ஆவணமோ அளிக்கவில்லை. இதையடுத்து அப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ரஞ்சித்குமாரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications