ராஜீவ் கொலையாளிகளை ராம்ஜேத்மலானியின் உதவியாளர்கள் சந்தித்து ஆலோசனை

தூக்குத் தண்டனயை எதிர்த்து பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் சார்பில் இன்று மனு செய்யப்படவுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்காக வக்கீல்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மூவர் சார்பாகவும் மூத்த வக்கீல்கள் ராம்ஜேத்மலானி, ஹரீஷ் சால்வே ஆகியோர் ஆஜராகவுள்ளனர்.
இந்த நிலையில் ராம்ஜேத்மலானியின் உதவி வக்கீலான டெல்லி வக்கீல் ராமசுப்ரமணியம் உள்ளிட்ட வக்கீல்கள் குழு வேலூர் சிறைக்கு வந்தது. அங்கு மூன்று பேரையும் வக்கீல்கள் சந்தித்து ஆலோனை நடத்தினர்.
முருகனை சந்தித்தார் நளினியின் தாயார் பத்மா
இதற்கிடையே, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனைக் கைதி முருகனை அவரது மாமியாரும், மனைவி நளினியின் தாயாருமான பத்மா சந்தித்துப் பேசினார்.
மிகவும் உருக்கமாக இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
முருகனைப் பார்க்க அனுமதி கோருகிறார் நளினி
இதற்கிடையே, கணவர் முருகனை சந்திக்க அனுமதி தருமாறு கோரி அவரது மனைவி நளினி அரசுக்கு விண்ணப்பித்துள்ளார்.
வேலூர் சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கணவர் முருகனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டதால் நளினி உடைந்து போய் காணப்படுகிறார். பெரும் சோகத்துடன் உள்ள அவர் தனது கணவரைப் பார்க்க அனுமதி கோரி சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளார்.
அவரது கோரிக்கையை அரசுக்கு சிறை நிர்வாகம் அனுப்பியுள்ளது. அரசு அனுமதி கொடுத்ததும் நளினியை வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications