மக்களின் மனநிலையே அன்னா ஹசாரேவின் வெற்றிக்கு காரணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டில் நிலவி வரும் ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு நாடேங்கிலும் இருந்து ஆதரவு கிடைக்க மக்களிடம் நிலவிய ஒரே மாதிரியான மன நிலையே காரணம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் நிலவிவரும் ஊழலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற அன்னா ஹசாரேயின் போராட்டம் சிறிய அளவில் துவக்கப்பட்டது. அதற்கான சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற முதல் முயற்சி ஊடகங்க நண்பர்கள் மூலமாக சிறியளவிலான ஆதரவு திரட்டப்பட்டது.

அதை அரசியல்வாதிகள் ஏளனமாக பேசிய போது, மெதுவாக நடுத்தர குடும்பத்தினரையும் தாண்டி போராட்டம் வலுக்க ஆரம்பித்தது. ஊழலுக்கு எதிரான உண்மையான நடவடிக்கையை ஏற்க மறுத்தபோது, அது மக்களிடையே கோபத்தையும், ஏமாற்றத்தை அதிகரிக்க செய்தது.

ஊழலுக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பு காட்ட 2 முக்கிய காரணங்கள் இருந்தன. அரசு அமைப்புகளில் அதிகரித்து வரும் ஊழல்களால் மக்கள் மனமொடிந்து போயுள்ளனர். தற்போதுள்ள அரசும் ஊழல் நிறைந்ததாகவே தொடர்கிறது. மேலும், ஆட்சியாளர்களின் மக்கள் குறித்தோ, அவர்களின் எதிர்பார்ப்பை குறித்து பொருட்படுத்தாமல் வெளியிடும் அறிக்கைகளும், பேச்சுகளும் மக்களை துவண்டு போக செய்துள்ளது. அவர்களின் பேச்சில் எந்த நம்பிக்கை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அன்னா ஹசாரேவின் போராட்டத்தை துச்சமாக நினைத்து, சில ஊடகங்களிலும் சில அமைச்சர்கள் கருத்துகளை தெரிவித்தனர். அடுத்த கட்டமாக அன்னா ஹசாரேவை கைது செய்வதால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டனர். ஆனால், ஊழலுக்கு எதிரான போரட்டத்தை அடக்க முடியவில்லை.

இந்த செய்திகளை அறிந்த பல வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்தனர். இதன் இடையே சில நடிகர்கள் உட்பட பலரும் இதன்மூலம் கிடைக்கும் இலவச விளம்பர வாய்ப்பை தவறவிடவில்லை. சிலர் பல சர்ச்சைக்குரிய பேச்சுகள் மூலம் பழித்து உரைத்தனர்.

இந்நிலையில், அன்னா ஹசாரேயின் உடல்நிலை சிக்கலடைய துவங்கிய போது, அன்னா ஹசாரே கைது செய்யப்பட்ட காரணமும், அவரது ஊழலுக்கு எதிரான கருத்திற்கு நிறைய வேறுபாடு உள்ளது என, பிரமதர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் பேசினார். அதன்பின், பாராளுமன்றத்தில் ஜனலோக்பால் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது, காங்கிரஸ் இளந்தலைவரின் பேச்சில், ஊழலுக்கு எதிரான நீண்டகால உறுதியான திட்டத்திற்கு, சில மாற்றங்கள் தேவை என கூறியது மசோதாவை ஏற்றுக் கொள்ள அரசு மறைமுகமாக ஒப்புக் கொண்டது தெரிந்தது.

இதற்கெல்லாம் முக்கிய காரணம், அம்பேத்கார் இயற்றிய அரசியலமைப்பு சட்டத்தை இன்றைய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான். அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தில், நாம் மக்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. இதற்கு மக்களே பிரதானமானவர்கள் என்பது பொருள்.

ஆனால், இன்றைய அரசியல்வாதிகள் மக்களாட்சி, சுதந்திரம், குடியரசு, அரசியலமைப்பு ஆகியவற்றை சரியாக புரிந்த கொள்ளாமல் இருப்பது தெரிகிறது. மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் உள்ள எம்.பி.,க்கள், குடிமக்களின் மீது அக்கறை காட்ட வேண்டும். ஒரு அரசின் வளமான நிலைக்கு, மருந்ததாக சிறிய போராட்டமும் அமையும் என்பது அன்னா ஹசாரேயின் போராட்டத்தின் மூலம் தெளிவாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+