விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இந்து மக்கள் கட்சிக்கு போலீஸ் திடீர் தடை
மெஞ்ஞானபுரம்: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இந்து மக்கள் கட்சிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (1ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தி சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை வைக்க, ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர்.
இந்து மக்கள் கட்சி சார்பில் மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள வாகைவிளை உள்பட உடன்குடி ஒன்றிய பகுதியில் 44 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தி குலசேகரபட்டினம் கடற்கரையில் சிலைகளை கரைக்கவும் போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் உடன்குடி ஒன்றிய பகுதிகளில் இந்து மக்கள் கட்சி விநாயகர் சதுர்த்தி விழா நடத்த போலீசார் திடீரென தடை விதித்துள்ளனர். இது இந்து மக்கள் கட்சியினரை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்து மக்கள் கட்சியினர் சார்பில் 44 விநாயகர் சிலைகள் வாங்கப்பட்டு வாகை விளை பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அங்கு பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications