அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு: போலீசார் மதுரை உயர் நீதிமன்றத்தி்ல் மேல்முறையீடு
திருச்செந்தூர்: எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்செந்தூர் நீதிமன்றம் போதிய அவகாசம் கொடு்க்காததால் போலீசார் மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருக்கின்றனர்.
திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனை ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் சுரேஷை கொலை செய்ய முயன்றது, டாஸ்மாக் பாரில் வெடிகுண்டு வீசத் தூணடியது, திமுக அலுவலகத்துக்கு தீ வைக்கத் தூண்டியது ஆகிய 3 வழக்குகளின் கீழ் கைது செய்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த 3 வழக்குகளிலும் அவரிடம் விசாரிக்க வேண்டும் என்று திருச்செந்தூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆறுமுகநேரி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த 20 மற்றும் 22-ம் தேதி நடந்தது. 22-ம் தேதியன்று நடந்த விசாரணை முடிவில், மனுவில் 3 வழக்குகளில் தனித்தனியாக காவலில் எடுத்து விசாரி்க்க அனுமதி கோரவில்லை என்றும், அதில் போதிய விவரங்கள் இல்லை என்றும் கூறி மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து ஆறுமுகநேரி போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது டாஸ்மாக் பாரில் வெடிகுண்டு வீசத் தூண்டியது, தி்முக அலுவகத்தை தீ வைக்கத் தூணடியது ஆகிய 2 வழக்குகளில் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர். இதற்காக நேற்று அனிதா ராதாகிருஷ்ணனை திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆறுமுகநேரி திமுக அலுவலகத்தை தீ வைக்கத் தூண்டிய வழக்கில் 6 மணி நேரமும், டாஸ்மாக் பாரில் வெடிகுண்டு வீசத் தூண்டிய வழக்கில் 3 மணி நேரமும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் அவர் கூறுகையில்,
அனிதா ராதாகிருஷ்ணனை ஆறுமுகநேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் அழைத்துச் சென்று மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும். அவரை மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ எந்தவிதமான துன்புறுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க போதுமான கால அவகாசம் இல்லாததால் மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதகாக போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அடுத்த மாதம் 12-ம் தேதி அனிதா ராதாகிருஷ்ணனை ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications