அரசியல்வாதிகள் அவமதிப்பு: கிரண் பேடி, ஓம் புரிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்
டெல்லி: இந்தி நடிகர் ஓம் புரி மற்றும் கிரண் பேடி ஆகியோர் மீது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரிமை மீறல் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு இரு அவைகளும் தனித்தனியே நோட்டீஸ் அனுப்பபியுள்ளன.
அன்னா ஹஸாரே ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தபோது அவருக்கு ஆதரவாக நடிகர் ஓம் பூரி பேசினார். அப்போது அவர் அரசியல்வாதிகள் படிப்பறிவற்றவர்கள், திறமையற்றவர்கள், திருடர்கள் என்று சரமாரியாகத் தாக்கினார். அரசியல்வாதிகள் சமயத்திற்கு ஏற்ப முகமூடி அணிந்து கொள்பவர்கள் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடியும் தன் பங்குக்கு தாக்கிப் பேசினார். அப்போது தனது முகத்தில் முகமூடி அணிந்தார்போன்று செய்தும் காட்டினார்.
இதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதேபோல அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு மசோதாக்களை நிறைவேற்றுகின்றனர் என்று பிரஷாந்த் பூஷன் தெரிவித்ததற்கு மாநிலங்களவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
எம்.பி.க்கள் புனியா, ஜெகதாம்பிகா பால், ராம்ஷங்கர் ராஜ்பார், லால்சந்த் கடாரியா, மிர்ஸா அஸ்லாம் பெக், பிரவீன் ஏரன் மற்றும் சைலேந்திர குமார் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக மனுக்கள் அளித்துள்ளதாக சபாநாயகர் மீரா குமார் தெரிவித்தார்.
ராம்கோபால் யாதவ்(சமாஜ்வாதி) மற்றும் முகமது ஆதீப்(சுயேச்சை) ஆகியோரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக மாநிலங்களவை துணை தலைவர் ரஹ்மான் கான் தெரிவித்தார்.
கேள்வி நேரம் முடிந்த பிறகு பேசிய ராம்கோபால் யாதவ் கூறுகையில், நடிகர் ஓம் புரி நாடாளுமன்ற உறுப்பினர்களை திருடர்கள், திறமையில்லாதவர்கள் என்று கூறியிருக்கிறார். எனவே, இது தொடர்பாக உறுப்பினர்கள் கொடுத்துள்ள மனுக்களை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார். அதற்கு மற்ற உறுப்பினர்கள் மேஜையத் தட்டி வரவேற்றனர்.
தனது பேச்சுக்கு நடிகர் ஓம் புரி மன்னிப்புக் கேட்டுவிட்டார். ஆனால் கிரண் பேடி மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை என்று அவர் தெரிவித்தார்.
மன்னிப்பு கேட்டு ஓம் புரி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மேடையில் பேசியபோது நான் ஒரு நடிகன் என்பதை மறந்துவிட்டேன். நான் நானாக இருந்திருக்க வேண்டும். என் வார்த்தைகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் வந்தால் விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன் என்றார்.
நாடாளுமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்தால் நான் பதில் அளிப்பேன். ஆனால் இதுவரை எனக்கு எந்தவித நோட்டீஸும் வரவில்லை என்று கிரண் பேடி தெரிவித்தார்.
ஓம் புரி நாடாளுமன்ற உறுப்பினர்களை படிப்பறிவில்லாதவர்கள் என்று கூறியுள்ளது நாடாளுமன்ற மாண்பை குலைக்கும் செயல் என்று ஆதீப் ஆலம் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களில் 80 சதவீதம் பேர் இளங்கலை பட்டதாரிகள், உறுப்பினர்கள் படித்தவர்களுக்கு இணையான அனுபவம் உள்ளவர்கள் என்றார்.
அன்னா ஹஸாரே ஒரு காலத்தில் லாரி டிரைவராக இருந்தார் என்பது பிரஷாந்த் பூஷனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று சிவானந்த திவாரி கூறினார். இதில் இருந்தே படிப்பறிவில்லாதவர்கள் படித்தவர்களைவிட நன்கு புரிந்து கொண்டு செயல்படுபவர்கள் என்பது விளங்கும் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications