ராஜஸ்தான் சட்டசபையில் செருப்பு வீசி சண்டை: பாஜக எம்.எல்.ஏ. சஸ்பெண்ட்
ஜெய்பூர்: ராஜஸ்தான் சட்டசபையில் பாஜக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒருவர் மீது ஒருவர் செருப்பை வீசி சண்டை போட்டதால் சபை ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று ராஜஸ்தான் சட்டசபையில் பாஜக பெண் எம்.எல்.ஏ. பிரமிளா குந்தரா காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரகு ஷர்மா சக்ஷூவில் உள்ள நிலத்தை தனது மனைவியின் பெயரில் அபகரித்துவிட்டதாகப் புகார் தெரிவித்தார். உடனே ரகு ஷர்மா குந்தராவின் பேச்சில் குறிக்கிட்டு தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தார். குந்தராவுக்கு எதிராகவும் பேசினார்.
இதனால் ஆத்திமடைந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் அவையில் நடுவில் வந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்கட்சியினர் பகுதியில் இருந்து காங்கிரஸ் எம். எல்.ஏ.க்கள் இருந்த பகுதி நோக்கி ஒரு செருப்பு வீசப்பட்டது. ஆனால் அது யார் மீதும் படாமல் அதிகாரிகள் இருக்கை அருகே விழுந்தது.
இதில் கடுப்பான ரகு ஷர்மா பதிலுக்கு தனது ஷூவை கழற்றி எதிர்கட்சிகள் இருந்த இடம் நோக்கி வீசினார். இதையடுத்து சபை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸார் நோக்கி வந்த செருப்பு கீழே கிடந்தது. அதை காவலாளி ஒருவர் எடுத்தபோது காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதாப் சிங் அந்த செருப்பை வாங்கிக் கொண்டு சபாநாயகர் தீபேந்திர சிங் ஷெகாவத் இருந்த அறைக்கு சென்றார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது செருப்பை வீசியதற்காக லாத்புரா எம்.எல்.ஏ. பவானி சிங் ரஜாவத் சபையில் இருந்து 1 ஆண்டு காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications