வீடு அபகரிப்பு வழக்கில் மன்னர் பரம்பரையை சேர்ந்த 2 பேர் கைது
மதுரை: மதுரையில் மன்னர் பரம்பரையை சேர்ந்த 2 பேரை, 5 கோடி ரூபாய் வீட்டை ஆக்கிரமிப்பு செய்த வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
மதுரை, கே.கே.நகரில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை கொண்டவர் விஜயன். பெங்களூரில் ஐ.டி., இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். விஜயன் மதுரையில் உள்ள தனது வீட்டை மாணிவாசு என்பவருக்கு 5 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு அளித்திருந்தார்.
கடந்த 2002ல் வாடகைக்கு எடுத்த மாணிவாசு வீட்டிற்கு சரியாக வாடகை செலுத்தி வந்தார். 1 ஆண்டிற்கு பின் அதற்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாபுசண்முகம், பிரசாத் சேதுபதி ஆகியோர் வாடகை செலுத்த ஆரம்பித்தனர். போக போக வாடகை செலுத்துவதை நிறுத்திவிட்டனர்.
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விபரத்தை அறிந்து கொண்ட விஜயன் இது குறித்து, இருவரிடமும் கேட்டார். ஆனால் பாபுசண்முகமும், பிரசாத் சேதுபதியும் வீட்டை தங்களுக்கு விற்குமாறு விஜயனை மிரட்டினர்.
கடந்த 2009ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கும் இந்த வீடு தி.மு.க., தேர்தல் அலுவலகமாக பயன்படுத்தப்பட்டது. இதற்காக, போலி ஆவணங்களை தயாரித்த பாபுசண்முகமும், பிரசாத் சேதுபதியும் மாவட்ட நிர்வாகத்தினரிடம் அனுமதி பெற்றனர்.
அதன்பிறகு விஜயன் வீட்டை காலி செய்ய கூறியதற்கு, இருவரும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் விஜயன் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில், பாபு சண்முகத்தையும், பிரசாத் சேதுபதியையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், இருவரும் ராமநாதபுரம் மன்னரின் பாரம்பரையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications