ஜனநாயகம் மக்களைப் பற்றியது, நாடாளுமன்றத்தையல்ல: ராஜீவ் சந்திரசேகர்

அந்த கட்டுரை பின் வருமாறு,
அரசின் ஊழலை எதிர்த்து ஜந்தர் மந்தரில் அன்னா ஹஸாரேவின் போராட்டம் துவங்கியது. பின்னர் அது நாட்டில் உள்ள ஊழலை எதிர்த்து நாடு தழுவிய பெரிய போராட்டமாக மாறியது.
இதை முதலில் டெல்லியில் உள்ள பணம் படைத்தவர்கள் எள்ளி நகையாடினர். அன்னாவின் போராட்டம் சிலரின் போராட்டமாக ஆரம்பித்து, நடுத்தர மக்களின் போராட்டமாக உருமாறி பின்னர் நாடு தழுவிய போராட்டமாக மாறியது என்று சில பத்திரிக்கை ஆசிரியர்கள் எழுதினர். என்ன பெரிய போராட்டம் என்றிருந்தவர்களை மக்களின் கோபம், எரிச்சல், கடுப்பு திரும்பிப் பார்க்க வைத்தது.
தற்போது ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவின் குறை, நிறைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஏற்கனவே கூறப்பட்ட சில நல்ல கருத்துகளை, திரும்பிப் பார்ப்போம்.
ஒன்று, இந்திய மக்கள் ஊழலைப் பார்த்து பார்த்து அலுத்து, சலித்து கடுப்பாகிவிட்டனர். இரண்டு, ஆட்சியாளர்கள், அவர்களது உறவினர்கள், ஊடகங்களில் உள்ள நண்பர்கள் ஆகியோருக்கு நாட்டு நடப்பும், மக்களின் போக்கும் சரிவரத் தெரியவில்லை.
இரண்டாவது காரணம் கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நான் டெல்லிக்கும், இந்தியாவுக்கும், இந்தியாவின் கருத்துக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி பற்றி எழுதியிருந்தேன். அதற்கு டெல்லி பணம் படைத்தவர்களின் கருத்து என்னவென்பதை சற்று பார்ப்போம். அன்னாவின் போராட்டத்தை நடுத்தர வர்க்கத்தினரின் போராட்டம் என்று கூறிய பத்திரிக்கை ஆசிரியர்கள் சிலர் மறுத்தனர்.
தற்பெருமை மற்றும் ஏளனச் சிரிப்பு சிரித்த அமைச்சர்கள் முதலில் போராட்டக்காரர்களின் தலைவரை இகழ்ந்தனர். அது ஒன்று நடக்கவில்லை என்றவுடன் அன்னாவையும், அவரது குழுவினரையும் கைது செய்தனர். அதுவும் தோல்வியடையவே இந்தியாவை சீர்குழைக்க சிலர் சதி செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டினர். இந்த அவல நாடக்த்தில் பல கதாபாத்திரங்கள் வந்தன. டெக் குரு, அருந்ததி ராய் உள்ளிட்ட சிலர் சும்மா கிடைக்கும் விளம்பரத்தை விடுவானேன் என்று மசோதா குறித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். ராம் விலாஸ் பாஸ்வான் என்னவென்றால் ஜன் லோக்பால் மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதை எம்பி அலி அன்வர் எதிர்த்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அரசியல் உள்ளுணர்வை இழந்தது. அன்னாவின் உடல்நிலை மோசமடைந்து வந்ததும் இத்தனை நாள் இல்லாமல் பிரமருக்கு அன்னா மீதும், அவரது கொள்கை மீதும் மரியாதை ஏற்பட்டது. அன்னாவை கைது செய்து திஹார் சிறையில் அடைத்தபோது இந்த மரியாதை எங்கு போனது என்பது வேறு விஷயம். கடந்த 5 மாதங்களாக அன்னா குழுவினரை சுற்றி சுற்றி வந்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியபோது இந்த மரியாதை எங்கே சென்றது என்பது வேறு விஷயம்.
ஊழலுக்கு நிரந்தர தீர்வு தேவை என்றால் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தான் நம்புவதாக காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் தெரிவித்தார். அவர் பேசிய சில மணி நேரத்திலேயே ஜன லோக்பால் மசோதா குறித்து விவாதிக்கத் தயார் என்று அரசு அறிவித்தது. இதையடுத்து போராடியவர்கள் உள்பட அனைவருமே நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
டெல்லி பணம்படைத்தவர்கள் நம் ஜனநாயகம், குடியரசு, அரசியல் அமைப்பு பற்றி அவர்கள் புரிந்துகொள்ளவேயில்லை. அரசியல் அமைப்பை எழுதுகையில் அம்பேத்கார் "மக்களாகிய நாம்" என்று எழுதினார். மக்கள் தான் முக்கியம், அதிகாரமுள்ளவர்கள் என்று அதற்கு அர்த்தம். ஆனால் மக்களை விட நாடாளுமன்றம் தான் முக்கியம், அதிகாரம் உள்ளது என்பது நம் அரசியல் அமைப்பையே குலைக்கிறது.
எனவே, மக்களின் கருத்துகளை, குறைகளைக் கேட்டு தீர்த்து வைப்பது எம்.பி.க்களின் கடமை. அவ்வப்போது ஒரு புரட்சி நடப்பது நல்லது. அரசு ஆரோக்கியமாக நடக்க அது மருந்தாக அமையும் என்று தாமஸ் ஜெபர்சன் தெரிவித்துள்ளார். ஜெய் அன்னா
Read in English: Our Democracy Is About People, Not Parliament












Click it and Unblock the Notifications