கோவை, திருப்பூரில் தொழிலாளர்களுடன் கைகோர்த்து விசைத்தறி உரிமையாளர்களும் ஸ்டிரைக்
கோவை: திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில், நெசவு பணியில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில், விசைத்தறி உரிமையாளர்களும் இணைந்து கொண்டதால், இரு மாவட்டங்களும் ஸ்தம்பித்தன.
திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம், அவினாசி, மங்கலம், தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர், 63 வேலம்பாளையம் போன்ற பல்வேறு பகுதியில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கோவை மாவட்டத்தின் சோமனூர் பகுதியில் 1 லட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன.
தினமும் 12 முதல் 14 மணிநேரம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 180 முதல் 200 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படுகிறது. விசைத்தறி உரிமையாளர்களுக்கும், தொழிற்சங்களுக்கும் இடையேயான 3 ஆண்டுகளுக்கு 1 முறை சம்பள உடன்பாடு செய்யப்படும். புது சம்பள உடன்பாட்டிற்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆயிரக்கணக்கான விசைத்தறி கூடங்கள் இயங்கவில்லை. இந்நிலையில் இவர்களோடு கோவை மாவட்ட தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் சேர்ந்து கொண்டனர். இதனால் 2 மாவட்டங்களும் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, விசைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது, விசைத்தறி தொழிலாளர்களுக்கு அடிப்படை செலவுகளை கூட நிறைவேற்ற முடியாத வகையில் ஊதியம் வழங்குவது சரியல்ல. 8 மணிநேரத்திற்கு 300 முதல் 350 ரூபாய் வழங்க வேண்டும். இதற்கு ஒத்து வராததால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றனர்.
இதனால், 2 மாவட்டங்களிலும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பும், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications