பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொலை: 3 வாலிபர்கள் கைது
நெய்வேலி: நெய்வேலியில் பள்ளி மாணவி கொலை வழக்கில், போலீசாரிடம் 3 பேர் சிக்கியுள்ளனர். இவர்களில் யார் கொலையாளி என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெய்வேலி அடுத்த வானதிராயபுரத்தை சேர்ந்த ரவிசந்தரன் மகள் சுனிதா(10). தனியார் பள்ளி ஒன்றில் 5 வகுப்பு படித்து வந்தார். கடந்த 17ம் தேதி காலையில் பள்ளிக்கு சென்ற சுனிதா, இரவாகியும் வீடு திரும்பவில்லை.
2 நாட்களுக்கு முன் தென்குத்து கிராமத்தில் உள்ள வீட்டு தோட்டம் ஒன்றில் இருந்த கிணற்றில், உடல் அழுகி தலையில்லாத நிலையில் சுனிதாவின் உடல் கிடைத்தது. உடல் தலை நேற்று கிணற்றின் அடியில் அழுகி சிக்கியிருந்தது. சுனிதா கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு, கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது.
இது குறித்து விசாரித்து வந்த போலீசார். சம்பவத்தன்று சுனிதாவை ஒரு வாலிபர் சைக்கிளில் அழைத்து சென்றதை சிலர் கண்டதாக தெரிவித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் அய்யனார்(21) எனத் தெரிந்தது. சுனிதா கொலை செய்யப்பட்ட நாளிலிருந்து மாயமான அய்யனாரை, சென்னை தாம்பரத்தில் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதே வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து, போலீசார் கூறியதாவது, பிடிப்பட்டவர்களில் யாராவது ஒருவர் தான் கொலை செய்திருக்க வேண்டும். சுனிதா வழக்கில், எந்தொரு முடிவுக்கும் வரமுடியவில்லை. கைதாகி உள்ள 3 பேரில் ஒருவர் மீது பலத்த சந்தேகம் உள்ளது. விரைவில் யார் கொலையாளி என்று தெரியவரும், என்றனர்.
மாணவி சுனிதாவை கற்பழிக்க முயன்று, பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications