மனிதாபிமானம் மரித்துவிடவில்லை என்பதற்கு ஜெயலலிதாவே சாட்சி - நாஞ்சில் சம்பத்
ஈரோடு: தமிழகத்தில் மனிதாபிமானம் இன்னும் மரித்துவிடவில்லை என்பதை தமிழக முதல்வர் ஜெயலலிதா நிரூபித்துள்ளார் என ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
ஈரோட்டில் ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய பேரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழகமே பேராடியது.
தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மாநில சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 28ம் தேதி செங்கொடி 3 பேரையும் விடுவிக்க கோரி உயிர் தியாகம் செய்வதற்கு முன்பு அவர் முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்துள்ளார். அவரின் உயிர் தியாகம் வீணாகவில்லை.
தமிழர்களுக்காக இந்த தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதாவை சரித்திரம் என்றும் மறக்காது. தமிழகத்தில் மனிதாபிமானம் மரித்து போகவில்லை என்று அண்ணா கூறியதற்கு ஜெயலலிதாவே சாட்சி, என்றார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications