யாரிடமும் உயிர்ப்பிச்சை கேட்கவில்லை, மறுக்கப்பட்ட நீதியைத்தான் கேட்கிறோம்- சீமான்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிரபராதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு மறுக்கப்பட்ட நீதியைத்தான் நாங்கள் கேட்கிறோமே தவிர யாரிடமும் உயிர்ப் பிச்சை கேட்கவில்லை என்று நாம் தமிழர் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத் இடைக்காலத் தீர்ப்பு குறித்து சீமான் கருத்து தெரிவிக்கையில்,
தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. நீதிக்கு கிடைத்த வெற்றி. நாங்கள் யாரிடமும் உயிர் பிச்சை கேட்கவில்லை. மறுக்கப்பட்ட நீதியைத்தான் கேட்கிறோம்.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பள்ளி, கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியுடன் திரண்டு வந்து போராட்டம் நடத்தினார்கள். இடைக்கால தடை உத்தரவு, அந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. செங்கொடியின் அர்ப்பணத்திற்கு கிடைத்த வெற்றி.
தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு முதல்வர் ஜெயலலிதா தாயுள்ளத்தோடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரச்சினையை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று மரண தண்டனையை ரத்துசெய்ய தொடர்ந்து போராடுவோம் என்றார் அவர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications