தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதான 3 தமிழ்ப்புலிகள் விடுவிப்பு
மதுரை: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ்ப்புலிகள் அமைப்பை சேர்ந்த 3 பேரை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விடுவித்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழ்ப்புலிகள் அமைப்பு தலைவர் நாகை திருவள்ளுவனின் கார் மீது விருதுநகர் மாவட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதை கண்டித்து தமிழ்ப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது, அரசுக்கு சொந்தமான பஸ்சை தீ வைத்து எரித்ததாக தமிழ்ப்புலிகள் அமைப்பை சேர்ந்த முத்துப்பாண்டி, சவுந்தரபாண்டி, மூக்கையா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்கள் 3 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
இந்நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்ப்புலிகள் அமைப்பை சேர்ந்த முத்துப்பாண்டி, சவுந்தரபாண்டி, மூக்கையா ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் ஜனார்த்தனராஜா, அருணா ஜெகதீசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில் தமிழ்ப்புலிகள் அமைப்பை சேர்ந்த முத்துப்பாண்டி, சவுந்தரபாண்டி, மூக்கையா ஆகியோர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications