விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவினர் மறியல்- ஆயிரக்கணக்கில் கைது- போக்குவரத்து ஸ்தம்பிப்பு
விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர் கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை மோசடியாக வாங்கியதாக கூறி பொன்முடி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவினர் கொதிப்படைந்துள்ளனர்.
இன்று மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். ஆங்காங்கே நடந்த இந்தப் போராட்டத்தால் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கபப்ட்டது. விழுப்புரம்-புதுவை சாலையில் வாகனப் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேங்கி நின்றன.
மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications