அரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்!
சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டி.வியில் சன், விஜய் போன்ற கட்டணச் சேனல்களையும் விரைவில் ஒளிபரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு நேற்று தொடங்கியது. சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும் இந்த கேபிள் டி.வி. சேவை தொடங்கப்பட்டுள்ளது. மாதக் கட்டணமாக ரூ.70 வசூலிக்கப்படுகிறது.
இதில். ஜெயா டி.வியின் அனைத்து சேனல்கள், பொதிகை, மெகா டி.வி, வசந்த் டி.வி, இமயம், கலைஞர் டி.வி. உள்ளிட்ட இலவச சேனல்கள் டிஜிட்டல் தரத்தில் ஒளிபரப்பாகி வருகின்றன.
ஆனால், சன் டி.வி, விஜய் டி.வி, ராஜ் டி.வி, விளையாட்டுச் சேனல்கள் உள்ளிட்ட கட்டண சேனல்கள் அதில் ஒளிபரப்பாகவில்லை.
கட்டண சேனல்களை எவ்வளவு கட்டணம் செலுத்திப் பெறுவது என்பது குறித்து முடிவெடுக்க குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இந்தக் குழு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி கட்டண சேனல்களுக்கான கட்டணங்களை முடிவு செய்யும்.
இதைத் தொடர்ந்து கட்டண சேனல்கள் அரசு கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பாகும். இவ்வாறு, கட்டணச் சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் மாதக் கட்டணமாக வசூலிக்கப்படும் ரூ.70ல் எந்த மாற்றமும் இருக்காது.
தற்போது அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் 34,344 கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஒ.க்கள் சேர்ந்துள்ளனர். இவர்களிடம் 1 கோடியே 45 லட்சம் இணைப்புகள் உள்ளன. 31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள ஒளிபரப்பு மையங்களை 24 மணி நேரமும் பராமரிக்கவும், ஒளிபரப்பு சேவையை தங்கு தடையின்றி மக்களுக்கு வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
சென்னையிலும் படிப்படியாக அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications