அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்... ஒரு வருடத்துக்கு முன்பே தயாரான 'திரைக்கதை வசனம்!'
புனே: அன்னா ஹஸாரேயின் உண்ணாவிரதம் குறித்த சினிமா படம் மராத்தியில் இப்போது தயாராகிறது. ஆனால் இந்தப் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் கடந்த ஆண்டே தயாராகிவிட்டதாக அதை எழுதிய கணேஷ் ஷின்டே கூறியுள்ளார்.
மராத்தியில் தயாராகும் இந்தப் படத்துக்கு "மாலா அன்னா ஹாய்காய்" (அன்னா ஹசாரேவாக விரும்புகிறேன்) என பெயரிடப்பட்டுள்ளது. மராத்தி நடிகர் அருண் நலவதே அன்னா ஹசாரே வேடத்தில் நடிக்கிறார். மற்ற பாத்திரங்களிலும் மராத்தி நடிகர்களே நடிக்கிறார்கள்.
இதுகுறித்து படத்தின் எழுதாத்தாளர் கணேஷ் ஷிண்டே கூறுகையில், "அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருப்பதற்கு முன் கடந்த ஆண்டே கதை தயாராகி விட்டது. அன்னா ஹஸாரே அனுமதியுடன் அவர் உண்ணாவிரதம் இருக்கும் காட்சிகள், மக்கள் எழுச்சி ஆகியவை படத்தில் சேர்க்கப்படும். அவரை கைது செய்தது, சிறையில் அடைத்தது, ஆர்ப்பாட்டம் போன்றவற்றை கதையில் சேர்த்து இருக்கிறேன்," என்றார்.
அப்படியெனில் இந்தப் போராட்டம் ஓராண்டுக்கு முன்பே திட்டமிடப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மிகக் குறைந்த பட்ஜெட்டில் ரூ.60 லட்சம் செலவில் தயாராகும் இந்தப் படம் நவம்பர் மாதம் 13-ந்தேதி மராட்டிய மாநிலம் முழுவதும் திரைக்கு வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications