இலங்கை எம்.பி. முன் தமிழக ஜோடி காதல் திருமணம்
நாகர்கோவில் : நாகர்கோவிலில் நடந்த காதல் திருமணம் ஒன்றில், இலங்கை எம்.பி., சீனிதம்பி யோகேஸ்வரனும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
நாகர்கோவில் வேதா நகரை சேர்ந்தவர் மரியகொறன்சி பிரின்சி. இவரும் அம்பலபதி பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு முதலில் இரு தரப்பு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு சிவசேனா நிர்வாகிகள் இரு தரப்பு பெற்றோரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். பலகட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க இரு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து இவர்களது திருமணம் 2ம் தேதி காலை சுசீந்திரம் கோயிலில் வைத்து நடத்த திட்டமிடப்பட்டது. விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காக வந்துள்ள இலங்கை மட்டக்களப்பு பகுதி எம்.பி., சீனிதம்பி யோகேஸ்வரன் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடந்தது.
இருதரப்பு பெற்றோர் மற்றும் உறவினர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். தமிழ்நாடு சிவசேனா மாநில பொது செயலாளர் சிவாஜி மாவட்ட தலைவர் பரமேஸ்ரவன் தம்பி, இளைஞரணி அமைப்பாளர் கண்ணன், சுரேஷ் கிருஷ்ணா மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications