ரூ. 40,000 கடனைத் திருப்பித் தருவதில் தகராறு- அக்கா வீடு மீது குண்டு வீசிய தம்பி
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், தனது அக்காவுடன் ஏற்பட்ட சண்டையில் கோபமடைந்த தம்பி ஒருவர் அக்காவின் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை சரமாரியாக வீசினார். இதில் வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது.
கமுதி வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. இவரது தம்பி இருளாண்டி. இந்த நிலையில் ஈஸ்வரி மற்றும் மீனாட்சி சுந்தரம் என்பவரின் வீடுகள் மீது இருளாண்டி சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகளை வீசினார். இதில் ஈஸ்வரி வீட்டில் வீசிய குண்டுவெடித்தது. இதில் வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். வெடிக்காத நிலையில் இருந்த ஒரு குண்டைக் கைப்பற்றி செயலிழக்கச் செய்தனர். விசாரணையில், அக்கா ஈஸ்வரியிடம் ரூ. 40,000 கடன் வாங்கியுள்ளார் இருளாண்டி. ஆனால் அதைத் திருப்பித் தராமல் இருந்துள்ளார். இதுதொடர்பாக அக்கா தட்டிக் கேட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக மீனாட்சி சுந்தரம் பேசியுள்ளார். இதனால் ஏற்பட்ட சண்டையில்தான் குண்டைப் போட்டு விட்டார் இருளாண்டி.
அக்கா வீடு மீது தம்பி குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications