சிறிய ரக விமானங்கள் மூலம் அமெரிக்காவை தாக்க அல்கொய்தா திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
வாஷிங்டன்: 9/11 தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அல் கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்கா மீது சிறிய ரக விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அந்நாட்டு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அல்கொய்தா தீவிரவாதிகள் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மற்றும் பென்டகன் கட்டிடங்கள் மீது விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இந்த கொடூர சம்பவம் நடந்து வரும் 11-ம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
இதற்கிடையே 10-ம் ஆண்டு நினைவு நாளில் அல்கொய்தா அமெரிக்காவைத் தாக்க திட்டமிட்டிருந்தது அப்போத்தாபாத்தில் உள்ள பின் லேடன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து தெரிய வந்தது. இந்நிலையில் வரும் 11-ம் தேதி அல் கொய்தா சிறிய ரக விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறிய ரக விமானங்களைக் கண்டால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் நடத்த அல் கொய்தா தீவிரவாதிகள் சிறிய ரக விமானங்களை ஓட்டி பயிற்சி எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கப் படைகள் அல் கொய்தா தலைவர் பின் லேடனைக் கொன்றதால் அதற்காக பழிவாங்கும் நடவடிக்கையில் அந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications