பாங்க் ஆப் அமெரிக்கா: பணி நீக்க எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்வு!

இது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியையும், மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியா என்ற கேள்வியையும் இந்த செய்தி கிளப்பியுள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கி பாங்க் ஆப் அமெரிக்கா. அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி காரணமாக, சிக்கன நடவடிக்கையாக அடுத்த ஆண்டுக்குள் 10000 பணியாளர்களை நீக்கும் திட்டம் உள்ளதாக சில வாரங்களுக்கு முன் தெரிவித்தது.
இந்த நிலையில் இப்போது இந்த எண்ணிக்கை 30000 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளதாகவும், மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 10 சதவீதத்தினரை குறைத்தால்தான் இப்போது சந்தையில் நிலைத்திருக்க முடியும் என வங்கி நம்புவதாகவும் அமெரிக்காவின் 'சார்லோட் அப்ஸர்வர்' தெரிவித்துள்ளது.
2007-2009 ஆண்டுகளில் பாங்க் ஆப் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட தொடர் நஷ்டம் மற்றும் இந்த வங்கியின் துணை நிறுவனங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வழக்குகள் காரணமாக வங்கி தடுமாறிக் கொண்டிருப்பதாகவும், இதிலிருந்து மீளவே இந்த பணி நீக்கம் என்றும் கூறப்படுகிறது.
நிதி நெருக்கடி காரணமாக கடந்த வாரம், வாரன் பஃபேயின் பெர்க்ஷையர் ஹதாவேவிடமிருந்து 5 பில்லியன் டாலரும், சீன வங்கியில் தனக்கிருந்த பங்குகளில் 10 சதவீதத்தை விற்று 8.3 பில்லியன் டாலர் நிதியும் பாங்க் ஆப் அமெரிக்கா திரட்டியது குறிப்பிடத்தக்கது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications