குளச்சலில் கடல் சீற்றம்: ராட்சத அலையில் சிக்கி 2 விசைப்படகுகள் சேதம்- ரூ. 1.2 கோடி இழப்பு
கு்ளச்சல்: குளச்சலில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. ராட்சத அலைகளில் சிக்கி 2 விசைப்படகுகள் சேதமடைந்துள்ளன. இதனால் ரூ. 1 கோடியே 20 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
குளச்சல் ஆழ்கடல் பகுதியில் நேற்று முன்தினம் கடும் சூறைக்காற்று வீசியது. இதனால் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் கரை திரும்பினர். இந்த நிலையில் அவர்கள் நேற்றும் தொழிலுக்கு செல்லவில்லை. சில மீனவர்கள் தொழில் உபகரணங்களை பழுது பார்த்தனர். சிலர் தற்போது பணி நடந்து வரும் குளச்சல் மீன்பிடி துறைமுக பகுதியில் விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் காலை முதல் குளச்சல் கடல் சீற்றுத்துடன் காணப்பட்டது. அலைகள் ஆக்ரோஷமாக எழுந்து கடல் நீர் வழக்கத்தை விட பல அடி தூரம் கரைக்கு வந்து திரும்பின. மதியம் 1.45 மணி அளவில் திடீரென எழுந்த ராட்சத அலை, அலை தடுப்பு சுவரை தாண்டி விழுந்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த குளச்சலைச் சேர்ந்த ஜார்ஜ், தாசன் ஆகியோரின் விசைப்படகுகளின் நங்கூர கயிறு அறுந்து படகுகள் அலை தடுப்பு சுவரின் மீது தூக்கி வீசப்பட்டன. இதில் 2 விசைப்படகுகளும் உடைந்து நொறுங்கின. அதில் இருந்த 10 ஆயிரம் லிட்டர் டீசல், வலைகள் ஆகியவை சேதம் அடைந்தது. இதனால் ரூ.1 கோடியே 20 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications